இடையமெரிக்கப் பண்பாட்டுப் பகுதி

Context of இடையமெரிக்கப் பண்பாட்டுப் பகுதி

இடையமெரிக்கப் பண்பாட்டுப் பகுதி அல்லது இடை அமெரிக்கப் பண்பாட்டுப் பகுதி அல்லது மெசோ-அமெரிக்கா (Mesoamerica அல்லது Meso-America) என்பது அமெரிக்கக் கண்டத்தில் உள்ள ஒரு பண்பாட்டுப் பகுதி ஆகும். இது நடு மெக்சிக்கோவில் இருந்து பெலீசு, குவாதமாலா, எல் சல்வடோர், ஒண்டூராசு, நிக்கராகுவா, கொசுத்தாரிக்கா ஆகிய நாடுகள் வரை பரந்துள்ளது. 16 ஆம் , 17 ஆம் நூற்றாண்டுகளில் எசுப்பானியக் குடியேற்றம் ஏற்படுவதற்கு முன்னர் இப் பகுதியில் பல கொலம்பசுக்கு முற்பட்ட சமுதாயங்கள் செழிப்புற வாழ்ந்துள்ளன.

வரலாற்றுக்கு முந்திய காலத்தில் இப்பகுதியில், பல வேளாண்மை ஊர்களும், பெரிய, சடங்குசார்ந்த அரசியல்-சமயத் தலைநகரங்களும் இருந்தன. இந்தப்பகுதி, அமெரிக்காக் கண்டத்தின் மிகச் சிக்கலானதும், உயர் முன்னேற்றம் அடைந்ததுமான பல பண்பாடுகளைக் கொண்டிருந்தது. இவற்றுள், ஒல்மெக், சப்போட்டெக், தியோத்திவாக்கன், மாயன், மிக்சுட்டெக், டோட்டோனாக், அசுட்டெக் போன்றவை அடங்கும்.

More about இடையமெரிக்கப் பண்பாட்டுப் பகுதி

வரைபடம்

Videos