பாதாமி குடைவரைக் கோவில்கள் (Badami cave temples) இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள பாகல்கொட் மாவட்டத்தின் பாதாமி என்னும் நகரில் உள்ளன. கி.பி. 6 ஆம் நூற்றாண்டு தொடங்கி 8 ஆம் நூற்றாண்டு வரை கர்நாடகத்தின் பெரும்பகுதியை ஆட்சிபுரிந்த சாளுக்கியர்களின் தலைநகரமாக பாதாமி, விளங்கியது. இந்த நகரம் இங்கு காணப்படும் மணற்கல் குன்றுகளில் குடையப்பட்டுள்ள பண்டைக்காலக் குடைவரைகளினாற் பெயர் பெற்றது.
பாதாமி குடைவரைக் கோயில்கள் நான்கு குகைகளை உள்ளடக்கியுள்ளன. 6 ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட இவை மென்மையான தக்காணத்து மணற்கல் பாறைச் சரிவுகளில் குடையப்பட்டுள்ளன.

முற்காலச் சாளுக்கியர்கள்[1]) என அழைக்கப்பட்ட சாளுக்கிய அரசர்களின் தலைநகரான பாதாமியில் அமைந்துள்ள நான்கு குகைக்கோயில்களும் ஆறாம் நூற்றாண்டிலிருந்து கட்டப்பட்டவை. நான்கில் மூன்றாவது குகையில் மட்டுமே, அக்குகை கட்டப்பட்ட ஆண்டுக்கான சான்றுள்ளது. இக்குகையில் காணப்படும் கன்னட மொழியில்[2][3] பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டில், சாளுக்கிய அரசன் மங்களேசனால் கிபி 578/579 இல் [4] இக்குகையின் கருவறை நிர்மாணிக்கப்பட்டதாகக் குறிக்கப்பட்டுள்ளது. இந்தக் கல்வெட்டிலிருந்து இக்குகைக் கோயில்களின் காலம் ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக அறியப்படுகிறது.[2][5][6]
பிற்காலத்தில் இப்பகுதியில் கட்டப்பட்ட இந்துக் கோயில்களுக்கு முன்னோடியாகவும் ’இந்துக் கோயில் கட்டிடக்கலையின் தொட்டில்’ எனவும் கருதப்படும் பாதாமி குகைக்கோயில் வளாகம், யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியக் களங்கள் பட்டியலில் மலப்பிரபா ஆற்றுப் பள்ளத்தாக்கில் "கோயில் கட்டிடக்கலையின் வளர்ச்சி - ஐகொளெ-பாதாமி-பட்டடக்கல்" என்ற தலைப்பில் இடம்பெற்றுள்ளது.[7][8] முதல் இரண்டு குகைக் கோயில்களிலும் காணப்படும் கலை வேலைப்பாடுகள் ஆறாம், ஏழாம் நூற்றாண்டின் வடதக்காண பாணியிலும், மூன்றாவது கோயிலில் நாகர மற்றும் திராவிடக்கலை ஆகிய இரு பாணிகளிலும் உள்ளன.[9][10] மூன்றாம் குகையில் நாகர-திராவிட பாணிகளின் கலவையான வேசரா பாணி வேலைப்பாடுகளும், கர்நாடாகத்தின் அதிமுற்கால வரலாற்றுச் சான்றுகளாக அமையும் எந்திர-சக்கர வடிவ வேலைப்பாடுகளும், வண்ணச் சுவரோவியங்களும் காணப்படுகின்றன.[11][12][13] முதல் மூன்று குகைகள் இந்து சமயம் தொடர்பான சிற்பங்களை, குறிப்பாக சிவன், திருமால் குறித்த சிற்பங்களையும்,[14] நான்காவது குகை, ஜைனத் திருவுருங்களையும் கருத்துக்களையும் சித்தரிக்கின்றன.[15]
↑ பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; History என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை ↑ 2.0 2.1 Fergusson 1880, ப. 405. ↑ Michell 2014, ப. 50. ↑ Fergusson 1880, ப. 409. ↑ Michell 2014, ப. 38–50. ↑ Burgess 1880, ப. 406. ↑ "Evolution of Temple Architecture – Aihole-Badami- Pattadakal". UNESCO. 2004. 21 October 2015 அன்று பார்க்கப்பட்டது. ↑ பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Madan என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை ↑ பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; jcharle என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை ↑ Jill Tilden (1997), First Under Heaven: The Art of Asia, Hali Publishers, ISBN 978-1-898113-35-5, pages 31–32 ↑ Kapila Vatsyayan and Bettina Bäumer (1992), Kalātattvakośa: A Lexicon of Fundamental Concepts of the Indian Arts, Motilal Banarsidass , ISBN 978-81-208-1044-0, pages 79–84 ↑ பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; stellakramrischpaint என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை ↑ James C Harle (1994), The Art and Architecture of the Indian Subcontinent, Yale University Press, ISBN 978-0-300-06217-5, pages 361, 166 ↑ Alice Boner (1990), Principles of Composition in Hindu Sculpture: Cave Temple Period, Motilal Banarsidass, ISBN 978-81-208-0705-1, pages 89–95, 115–124, 174–184 ↑ பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; aaacave4 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
புதிய கருத்தை சேர்