குவானக்கோ

குவானக்கோ

குவானக்கோ (Guanaco) தென்னமெரிக்காவைத் தாயகமாகக் கொண்ட ஒட்டக இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு. பொதுவாக இது தோள் வரை 107 முதல் 122 செ.மீ உயரமும் (3.5 - 4 அடி) 90 கிலோ எடையும் இருக்கும். இதன் உடலின் மேற்பாகம் இளம் பழுப்பு நிறத்திலும் அடிப்பாகம் வெண்மையாகவும் இருக்கும். முகம் சாம்பல் நிறத்திலும் சிறிய நேரான காதுகளையும் கொண்டிருக்கும். குவானக்கோ என்னும் பெயர் தென்னமெரிக்க கெச்சுவா மொழிச் சொல்லான வனாக்கு என்ற சொல்லில் இருந்து தோன்றியதாகக் கூறப்படுகிறது.

More images