Basilique du Sacré-Cœur de Montmartre
( இயேசுவின் திரு இதய பசிலிக்கா, பாரிஸ் )இயேசுவின் திரு இதய பசிலிக்கா, பாரிஸ் (Basilica of the Sacred Heart of Paris) எனவும் பொதுவாக திரு இதய பசிலிக்கா (Sacré-Cœur Basilica) எனவும் சுருக்கமாக திரு இதயம் (Sacré-Cœur; பிரெஞ்சு மொழி: Basilique du Sacré-Cœur, [sakʁe kœʁ]) எனவும் அழைக்கப்படுவது பாரிசில் உள்ள ஒரு கத்தோலிக்க திருச்சபை கோயிலும் சிறிய பசிலிக்காவும் ஆகும். இது இயேசுவின் திரு இதயத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது ஒரு முக்கிய நிலக் குறியாக நகரத்தின் உயர் புள்ளியில் அமைந்துள்ளது. திரு இதயம் அரசியல், கலாச்சார நினைவிடமாகவும் திகழ்கிறது. அத்துடன் இயேசுவின் திரு இதயத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள இது கிறித்துவின் அன்பையும் இரக்கத்தையும் தெரிவிப்பதாகவும் அமைந்துள்ளது. நினைவுச்சின்னம் தினமும் காலை 6:30 மணி முதல் இரவு 10:30 மணி வரை திறந்திருக்கும்.
மூலம் புகைப்படங்கள்:
Eric Pouhier - CC BY-SA 2.5
Zones
Statistics: Position (field_position)
377
Statistics: Rank (field_order)
148045
புதிய கருத்தை சேர்