சூழல் சூடான்

சூடான் (அரபு:السودان அஸ்-சூடான்) என்றழைக்கப்படும் சூடான் குடியரசு (அரபு: جمهورية السودان‎ ஜும்ஹரியத் அஸ்-சூடான்) ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள ஒரு நாடாகும். இது சிலவேளைகளில் வட சூடான் என அழைக்கப்படுகின்றது. இது பரப்பளவின் அடிப்படையில் ஆப்பிரிக்காவிலேயே மிகப்பெரிய நாடாகும். இது வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ளது. எனினும், 2011இல் பொதுஜன வாக்கெடுப்பின் மூலம் தென் சூடான் பகுதி தனி சுதந்திர நாடாகப் பிரகடனப்படுத்தப்பட்ட பின்னர், இது மாற்றமடைந்தது. இது தற்போது அல்ஜீரியா மற்றும் கங்கோ குடியரசுக்க அடுத்தபடியாக ஆபிரிக்காவில் மூன்றாவது பெரிய நாடாக விளங்குகின்றது.

வடக்கில் எகிப்தும், வடகிழக்கில் செங்கடலும், கிழக்கில் எரித்திரியாவும், தென்கிழக்கில் எத்தியோப்பியாவும், தெற்கில் தென் சூடானும், தென்மேற்கில் மத்திய ஆப்பிரிக்க குடியரசும், மேற்கில் சாட் நாடும், லிபியா வடமேற்கிலும் அமைந்துள்ளன. உட்புறமாக, நைல் நதி நாட்டை கிழக்கு மற்றும் மேற்கு அரைப்பகுதிகளாகப் பிரிக்கின்றன. நாட்டின் சனத்தொகையில் பெரும்பான்மையான மக்கள் இஸ்லாம் மதத்தைப் பின்பற்றுகின்றனர்.

சூடான் பண்டைய பல நாகர...மேலும் படி

சூடான் பண்டைய பல நாகரிகங்களான   குஷ், கெர்மா, நோபியாடியா, அலோடியா, மகுரியா, மெரொ மற்றும் பலவற்றுக்கு, உரைவிடமாக இருந்தது, இந்த நாகரீகங்கள் நைல் ஆற்றை ஒட்டி நெடுகிலும் செழித்தோங்கி இருந்தன. பேரரசுகளின் காலத்திற்கு முற்பட்ட காலத்தின் போது நுபியா, நாகடன், மேல் எகிப்து போன்றவை ஒரே மாதிரியானவையாக இருந்தன. சூடான் எகிப்துக்கு அருகாமையில் இருப்பதால், அதன் அண்மையில் உள்ள கிழக்குப் பகுதிகளின் பரந்த வரலாற்றில் பங்கு பெற்றது, சூடான் 6 ஆம் நூற்றாண்டில் கிறிஸ்தவமயமாக்கப்பட்டது, பின்வந்த 15 ஆம் நூற்றாண்டில் இஸ்லாமிய மயமாக்கப்பட்டது.

சூடான் ஐக்கிய நாடுகள் சபை, ஆபிரிக்க ஒன்றியம், அரபு லீக், இஸ்லாமிய ஒத்துழைப்பு நிறுவனம் மற்றும் அணிசேரா நாடுகள், இதேபோல் உலக வர்த்தக அமைப்பின் பார்வையாளர் நாடாக, போன்ற அமைப்புக்களில் அங்கத்துவம் வகிக்கின்றது. இதன் தலைநகர் கர்த்தூம் ஆகும். நாட்டின் அரசியல், கலாசார மற்றும் வர்த்தகமையமாக கர்த்தூம் நகர் காணப்படுகின்றது. சூடான், ஒரு கூட்டாட்சி ஜனாதிபதி பிரதிநிதி ஜனநாயகக் குடியரசு நாடாகும். சூடானின் அரசியல் நடவடிக்கைகள் தேசிய சட்டமன்றம் என அழைக்கப்படும் ஒரு நாடாளுமன்ற அமைப்பினால் நெறிப்படுத்தப்படுகின்றது.   சூடான் சட்ட அமைப்பு இஸ்லாமிய சட்டத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது.

எங்கே அருகில் படுக்கலாம் சூடான் ?

Booking.com

அருகிலுள்ள இடங்கள் சூடான் ?

454.391 மொத்த வருகைகள், 9.077 ஆர்வமுள்ள புள்ளிகள், 403 சேருமிடங்கள், 71 இன்று வருகை தருகிறார்.