சாங்காய்

சூழல் சாங்காய்

சாங்காய் (சீனம்: 上海 ஷாங் ஹாய், என்னும் "கடல் பக்கத்தில்") சீன நாட்டிலும் உலகளவிலும் மக்கள்தொகைப்படி மிகப்பெரிய நகரமாகும் . இது சீனாவின் வணிக மற்றும் பொருளாதார தலைநகரமாகவும் விளங்குகிறது. 23 மில்லியன் மக்கள்தொகை கொண்ட சாங்காய் சீனாவின் நான்கு மாநிலளவிலான நகராட்சிகளில் ஒன்றாகும். பன்னாட்டு மக்களும் வாழும் இந்நகரம் வணிகம், பண்பாடு, நிதியம், ஊடகம், கவின்கலை, தொழினுட்பம், மற்றும் போக்குவரத்தில் தாக்கமேற்படுத்தி வருகிறது. முதன்மை நிதிய மையமாக விளங்கும் சாங்காய் உலகின் மிகுந்த போக்குவரத்து மிக்க சரக்குக்கலன் துறைமுகமாகவும் உள்ளது.

இது சீனாவின் கிழக்குப் பகுதியில் யாங்சே ஆற்றின் கழிமுகப்பகுதியில் அமைந்துள்ளது. சீனக் கடலோரப் பகுதியின் மையத்தில் அமைந்துள்ளது. இதன் வடக்கு, தெற்கு மற்றும் மேற்கில் ஜியாங்சு மற்றும் செஜியாங் மாநிலங்களாலும் கிழக்கில் கிழக்கு சீனக்கடலாலும் சூழப்பட்டுள்ளது.

பல நூற்றாண்டுகளாக முதன்மையான நிர்வாக, கடல்வணிக, பண்டமாற்று மையமாக விளங்கிய சாங்காய் 19வது நூற்றாண்டில் ஐரோப்பியர்களின் வருகையால் விரைவாக வளர்ச்சியடையத் தொடங்கியது. சாங்காய் துறைமுக...மேலும் படி

சாங்காய் (சீனம்: 上海 ஷாங் ஹாய், என்னும் "கடல் பக்கத்தில்") சீன நாட்டிலும் உலகளவிலும் மக்கள்தொகைப்படி மிகப்பெரிய நகரமாகும் . இது சீனாவின் வணிக மற்றும் பொருளாதார தலைநகரமாகவும் விளங்குகிறது. 23 மில்லியன் மக்கள்தொகை கொண்ட சாங்காய் சீனாவின் நான்கு மாநிலளவிலான நகராட்சிகளில் ஒன்றாகும். பன்னாட்டு மக்களும் வாழும் இந்நகரம் வணிகம், பண்பாடு, நிதியம், ஊடகம், கவின்கலை, தொழினுட்பம், மற்றும் போக்குவரத்தில் தாக்கமேற்படுத்தி வருகிறது. முதன்மை நிதிய மையமாக விளங்கும் சாங்காய் உலகின் மிகுந்த போக்குவரத்து மிக்க சரக்குக்கலன் துறைமுகமாகவும் உள்ளது.

இது சீனாவின் கிழக்குப் பகுதியில் யாங்சே ஆற்றின் கழிமுகப்பகுதியில் அமைந்துள்ளது. சீனக் கடலோரப் பகுதியின் மையத்தில் அமைந்துள்ளது. இதன் வடக்கு, தெற்கு மற்றும் மேற்கில் ஜியாங்சு மற்றும் செஜியாங் மாநிலங்களாலும் கிழக்கில் கிழக்கு சீனக்கடலாலும் சூழப்பட்டுள்ளது.

பல நூற்றாண்டுகளாக முதன்மையான நிர்வாக, கடல்வணிக, பண்டமாற்று மையமாக விளங்கிய சாங்காய் 19வது நூற்றாண்டில் ஐரோப்பியர்களின் வருகையால் விரைவாக வளர்ச்சியடையத் தொடங்கியது. சாங்காய் துறைமுகத்தின் அமைவிடமும் பொருளியல் முக்கியத்துவமும் ஐரோப்பியர்களால் உணரப்பட்டது. முதலாம் அபினிப் போரில் பிரித்தானியர் வென்றபிறகு வெளிநாட்டு வணிகத்திற்கு திறக்கப்பட்ட பல துறைமுகங்களில் இதுவும் ஒன்றாக அமைந்தது. 1842ஆம் ஆண்டில் கண்ட நாஞ்சிங் உடன்படிக்கையின்படி சாங்காயில் வெளிநாட்டினர் குடியேற்றங்கள் அனுமதிக்கப்பட்டன. இதன்பிறகு கிழக்கிற்கும் மேற்கிற்குமான வணிகத்தில் சாங்காய் முக்கிய பங்கு வகித்தது. 1930களில் ஆசிய பசிபிக் மண்டலத்தின் தன்னிகரில்லா நிதிய மையமாக முன்னேற்றம் கண்டது. இருப்பினும், 1949இல் பொதுவுடமைக் கட்சி கையகப்படுத்தி பின்னர், சோசலிச நாடுகளுக்கு மட்டுமே வணிகம் குவியப்படுத்தப்பட்டது. இதனால் பன்னாட்டளவில் இதன் தாக்கம் குறையலாயிற்று. 1990களில் டங் சியாவுபிங் அறிமுகப்படுத்திய சீனப் பொருளாதார சீர்திருத்தங்களால் நகர வளர்ச்சி மீண்டும் புத்துயிர் பெற்றது. வெளிநாட்டு மூலதனம் குவியலாயிற்று.

சாங்காய் சுற்றுலாத் தலமாகவும் புகழ்பெறத் தொடங்கியது. இங்குள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க நீர்த்துறை, நகர தேவதை கோவில், யூயுவான் பூங்கா போன்றவையும் வளர்ந்துவரும் வானளாவிக் கட்டிடஙளும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றன. சீன நிலப்பகுதியின் பொருளாதார மேம்பாட்டின் காட்சியகமாக சாங்காய் குறிப்பிடப்படுகிறது.

எங்கே அருகில் படுக்கலாம் சாங்காய் ?

Booking.com
233.973 மொத்த வருகைகள், 7.465 ஆர்வமுள்ள புள்ளிகள், 323 சேருமிடங்கள், 2 இன்று வருகை தருகிறார்.